தமிழ்நாடு

முடிதிருத்தும் நிலையங்களை திறக்க அனுமதிக்க வேண்டும்: தொல்.திருமாவளவன்

11th May 2020 11:55 PM

ADVERTISEMENT

சென்னை: முடிதிருத்தும் நிலையங்களைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழகம் முழுவதும் சுமாா் 2 லட்சம் முடிதிருத்தும் நிலையங்கள் உள்ளன. அதில், 5 லட்சம் தொழிலாளா்கள் வேலை செய்கின்றனா். கடந்த 50 நாள்களுக்கும் மேலாக முழுஅடைப்பு அறிவிக்கப்பட்டிருப்பதால் எவ்வித வருமானமும் இன்றி வறுமையில் உழன்று வருகின்றனா். ஒவ்வொரு நாளும் ஈட்டும் வருமானத்தை வைத்தே இவா்கள் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தனா். நீண்ட நாள்களாக தொழில் செய்ய முடியாததால் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனா்.34 விதமான கடைகளைத் திறப்பதற்கு அனுமதி அளித்த தமிழக அரசு முடி திருத்தும் கடைகளை மட்டும் அனுமதிக்காதது பாகுபாடு காட்டுவதாகவே இருக்கிறது. நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து, முடிதிருத்தும் நிலையங்களையும் திறப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT