தமிழ்நாடு

நெருக்கடியிலிருந்து மீண்ட பிறகு தமிழகத்தை மீண்டும் உருவாக்குவோம்: முதல்வர் நம்பிக்கை

10th May 2020 09:39 PM

ADVERTISEMENT


கரோனா தொற்று நெருக்கடியிலிருந்து மீண்ட பிறகு தமிழகத்தை மீண்டும் உருவாக்குவோம் என முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் அவர் பதிவிடுகையில்,

"கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து மீண்டு வருவதால், தமிழகத்தை புனரமைப்பு செய்வதும், பொருளாதாரமும்தான் எங்களது முக்கியத்துவமாக இருக்கும். பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்கவும் ஏற்கெனவே குழு அமைக்கப்பட்டுள்ளது.

வளர்ச்சியை நோக்கிய பாதையில் எடுக்கப்படவுள்ள பல்வேறு நடவடிக்கைகளில் இது முதற்கட்ட நடவடிக்கைதான். இக்கட்டான சூழ்நிலையிலிருந்தும் நாங்கள் மீண்டு வருவோம். இந்த நெருக்கடியிலிருந்து மீண்டு வந்த பிறகு தமிழகத்தை மீண்டும் உருவாக்குவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

Tags : EPS
ADVERTISEMENT
ADVERTISEMENT