தமிழ்நாடு

திருமழிசை தற்காலிக சந்தை பயன்பாட்டுக்கு வந்தது

10th May 2020 07:18 PM

ADVERTISEMENT

திருமழிசையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மொத்த சந்தை பயன்பாட்டுக்கு வந்தது. 

கரோனா நோய்த்தொற்று காரணமாக கோயம்பேடு சந்தை மூடப்பட்டதையடுத்து, காய்கறி மொத்த விற்பனை சந்தை தற்காலிகமாக திருமழிசையில் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்தது.

இந்த அறிவிப்பின்படி திருமழிசையில் காய்கறி விற்பனைக்கான ஏற்பாடுகள் கடந்த சில நாள்களாக செய்யப்பட்டு வந்தன. போதிய சமூக இடைவெளியுடன் 200-க்கும் மேற்பட்ட கடைகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.

திருமழிசை தற்காலிக காய்கறிச் சந்தையில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து முதல்வா் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா். 

ADVERTISEMENT

இந்த நிலையில் திருமழிசையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மொத்த சந்தை பயன்பாட்டுக்கு வந்தது. சிஎம்டிஏ செயலர் கார்த்திகேயன், திருவள்ளூர் ஆட்சியர் மகேஸ்வரி ஆகியார் சந்தையை இன்று தொடங்கி வைத்தனர். 

இதன்பின் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுமுதல் திருமழிசை தற்காலிக சந்தைக்கு காய்கறிகள் எடுத்துச் செல்லப்படவுள்ளன. திங்கள்கிழமை(மே 11) அதிகாலை முதல் திருமழிசை காய்கறிச் சந்தை முழு வீச்சில் இயங்கும் என வியாபாரிகள் நம்பிக்கைத் தெரிவித்தனா்.

Tags : Thirumazhisai
ADVERTISEMENT
ADVERTISEMENT