தமிழ்நாடு

புழலில் நலிந்த மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கல்

10th May 2020 05:12 PM

ADVERTISEMENT

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி.ஆரூண், தொழிலதிபர் இம்ரான்கான், ஹசன்மௌலானா ஆகியோர் சார்பில் நலிந்த மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி புழல் காவாங்கரை மீன் அங்காடி வளாகத்தில் நடைபெற்றது. 

இதில் திருவள்ளூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் கே.எஸ்.ஆனந்தன், 23வது வட்ட காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.ஏ.மணிகண்டன், துணை தலைவர் காவை விஸ்வநாதன், செயலாளர் சிட்டிசேகர், அசோக், மைக்கேல், சதீஷ்குமார், மற்றும் மீன் அங்காடி ஊழியர்கள் நசீர், அமித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : congress
ADVERTISEMENT
ADVERTISEMENT