தமிழ்நாடு

திமிரியில் வெளிமாநில தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி வழங்கல்

10th May 2020 05:30 PM

ADVERTISEMENT

கரோனா நோய்த்தொற்று காரணமாக சிலைகள் செய்து விற்பனை செய்யும் தெலுங்கானா மாநிலம் கூலித் தொழிலாளர்கள் ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி, விளாப்பக்கம், ஆனை மல்லூர் ஆகிய பகுதிகளில் தங்கியுள்ளனர். 

அவர்களுக்கு ஆற்காடு வட்டாட்சியர் கே இளைஞரின் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை அரிசி மற்றும் மளிகை பொருட்களை 50 குடும்பங்களுக்கும் தாசில்தார் கே இளஞ்செழியன் தலைமையில் அரிசி மற்றும் மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் தாரகேஸ்வரி வழங்கினார். 

இதில் மாவட்ட செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் சரவணன் மண்டல துணை வட்டாட்சியர் மகாலட்சுமி வருவாய் ஆய்வாளர் சுரேஷ் கிராம நிர்வாக அலுவலர் ஞானவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT