தமிழ்நாடு

ஆம்பூர் வட்டத்தில் நாளை முதல் 127 தொழிற்சாலைகளில் உற்பத்தி துவக்கம்

10th May 2020 06:22 PM

ADVERTISEMENT

ஆம்பூர் வட்டத்தில் 127 தொழிற்சாலைகளில் நாளை (மே 11) உற்பத்தி துவக்கப்பட உள்ளன.

கரோனா நோய் பரவலை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் பொது முடக்கம் அமலில் உள்ளது.  அத்தியாவசிய பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் தவிர மற்ற அனைத்து விதமான தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள் பொது முடக்கம் காரணமாக மூடப்பட்டிருந்தன.  பொதுப் போக்குவரத்தும் முடக்கப்பட்டிருந்தது.  

இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பொது முடக்கத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அவை அமலுக்கு வந்துள்ளன.  மே 11-ம் தேதி முதல் தேனீர் கடைகள் முதல் பல்வேறு தனிப்பட்ட கடைகளை திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்த அறிவிப்பின்படி மாவட்டத்தில் தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளன.  

அதன்படி ஏற்றுமதி சார்ந்த தோல் மற்றும் தோல் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் ஆர்டர் பெறுவதற்காக மாதிரியை தயாரிக்க அனுமதி வழங்க வேண்டுமென அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தன.  அதன்படி தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.  முதல்கட்டமாக 35 தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.  

ADVERTISEMENT

அதைத் தொடர்ந்து ஏற்கனவே மாதிரி தயாரிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்ட தொழிற்சாலைகளையும் சேர்த்து 127 தோல் மற்றும் தோல் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் 50 சதவீத தொழிலாளர்களுடன், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் உற்பத்தியை துவங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  அதன்படி ஆம்பூர் வட்டத்தில் 127 தொழிற்சாலைகளில் உற்பத்திப் பணி இன்று முதல் (மே 11) துவங்க உள்ளது.
 

Tags : ambur
ADVERTISEMENT
ADVERTISEMENT