அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை (திங்கள்கிழமை) ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார்.
பொது முடக்கம் மே 17ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில், அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் நாளை பிற்பகல் 3 மணிக்கு ஆலோசனை நடத்தவிருக்கிறார்.
கரோனா தடுப்புப் பணிகள் குறித்தும், ஊரடங்கு நீட்டிப்பு/விலக்கு குறித்தும் அவர் முதல்வர்களுடன் ஆலோசனை நடத்துவார் எனத் தெரிகிறது. கரோனா தடுப்புப் பணிகள் குறித்து முதல்வர்களுடன் பிரதமர் மேற்கொள்ளும் 5வது ஆலோசனைக் கூட்டம் இதுவாகும்.
ADVERTISEMENT
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கலந்துகொள்வார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.