திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில், கரோனா தொற்று நோய் அச்சத்திலிருந்து, மக்களை பாதுக்காக்க, ரமலான் மாதம் முழுவதும், கூத்தாநல்லூர் இம்தாதுல் முஸ்லிமீன் சபையினரால், 150 திருக்குர்ஆன், ஒரு கோடி திக்ரு, ஒரு கோடி ஸலாவத்தும் ஓதப்பட்டு வருகிறது. இது குறித்து, இம்தாதுல் முஸ்லிமீன் சபையினர் மற்றும் இம்தாதுல் முஸ்லிமீன் சபையின் உலமாக்கள் அணியின் செயலாளர் எஸ்.சலீம் தீன் கூறியது, 1950 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட காலராவில் இருந்து மக்களைக் காப்பாற்றவும், நோய் நொடியிலிருந்து பாதுக்காக்கவும்தான், இம்தாதுல் முஸ்லிமீன் சபையினரால் தொடங்கப்பட்டது.
நபி பெருமானார் பெயரால், புனித மெளலூது மஜ்லீஸ், லெட்சுமாங்குடி காதர் மஸ்தான் ( வலியுல்லாஹ் ) தர்ஹாவில் நடத்தப்பட்டது. தொடர்ந்து அந்த மஜ்லீஸை ஒவ்வொரு ஆண்டும் புனித மெளலூது மஜ்லிஸ் ஸஃபர் மாதத்தில் நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், உலகத்தையே ஆட்டிப்படைத்து வரும், கரோனா தொற்று நோய், உலக மக்களை கரோனா அச்சத்திலிருந்து காப்பாற்றும் வகையில், 150 திருக்குர் ஆன், ஒரு கோடி திக்ரு, ஒரு கோடி ஸலவாத்தும் ஓதுவதற்கு முடிவு எடுக்கப்பட்டன.
புனித ரமலான் மாதமான ஏப்ரல் 24 ம் தேதி தொடங்கப்பட்டது. 200 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், தங்களது வீடுகளில், ரமலான் மாதம் முழுவதும், வரும் 24 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை வரை ஓதுகின்றனர். மே 9 ம் தேதி நேற்று வரை, 5 குழுக்களாகப் பிரிந்து, 150 பேர் 75 திருக்குர்ஆன் ஓதியுள்ளனர். மேலும், 63 லட்சத்து 79 ஆயிரத்து 861 திக்ரும், 63 லட்சத்து 3 ஆயிரத்து 678 ஸலவாத்தும் ஒதப்பட்டுள்ளன என்றார். ஏற்பாடுகளை, ஏ. அபு, B.மீரா மைதீன், எம்.கலீல் ரஹ்மான் நூரி மற்றும் நிர்வாகிகள் கவனித்து வருகின்றனர்.