தமிழ்நாடு

திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு

10th May 2020 05:03 PM

ADVERTISEMENT

அடுத்த 24 மணிநேரத்தில் திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்துக்கு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, நாமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன்கூடிய லேசான முதல் மிதமான மழையும். திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்தகாற்று மற்றும் இடியுடன்கூடிய கன மழையும் பெய்ய வாய்ப்பு. 
ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
குமரிகடல், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவை ஒட்டிய பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வரை வீசக்கூடுமென்பதனால் அடுத்த 24 மணி நேரத்துக்கு மீனவர்கள் இப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். 
தமிழகத்தில் மதுரை, திருச்சி, கரூர், சேலம், தர்மபுரி, வேலூர் மாவட்டங்கள் மற்றும் திருத்தணியில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடும் என்பதால் அடுத்துவரும் 2 தினங்களுக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முற்பகல் 11. 30 முதல் பிற்பகல் 3.30 வரை திறந்தவெளியில் வேலை செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 
சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ்ஸை ஒட்டி இருக்கும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


 

ADVERTISEMENT
ADVERTISEMENT