தமிழ்நாடு

திருவள்ளூர் பகுதியில் ஒரே நாளில் 47 பேருக்கு கரோனா தொற்று

10th May 2020 07:03 PM

ADVERTISEMENT

திருவள்ளூர் பகுதியில் ஒரே நாளில் 47 பேருக்கு கரோனா நோய் தொற்று பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் நாள்தோறும் பல்வேறு வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 47 பேருக்கு கரோனா நோய் தொற்று ரத்த பரிசோதனையில் உறுதியானது.

இதில் பூந்தமல்லி-16, திருவேற்காடு-1, வில்லிவாக்கம் ஒன்றியம்-8, மீஞ்சூர் ஒன்றியம்-5, திருவாலங்காடு ஒன்றியம்-3, திருவள்ளூர் ஒன்றியம்-8, பூண்டி-3, சோழவரம்-1, திருத்தணி-2 என மொத்தம்-47 பேருக்கு கரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 337 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் 61 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

தற்போது, சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 276 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடுப்புகள் அமைத்து பொதுமக்கள் வெளியே வருவதற்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில் கிருமி நாசினி தெளிப்பு பணிகள் மேற்கொண்டு வருவதாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ADVERTISEMENT


 

ADVERTISEMENT
ADVERTISEMENT