தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 15 குழந்தைகளுக்கு கரோனா உறுதி

10th May 2020 03:08 PM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 15 குழந்தைகளுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 11 ஆண் குழந்தைகள், நான்கு பெண் குழந்தைகள் அடங்குவர். 

எட்டு வயதில் இரண்டு பெண் குழந்தைகள், 3 வயதில் ஒரு சிறுமி, இரண்டு வயதில் ஒரு சிறுமி என இன்று மட்டும் நான்கு பெண் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று பிறந்து ஒருநாளே ஆன குழந்தை, 2 மாதங்கள் மற்றும் 16 மாதங்கள் ஆன குழந்தை என 11 ஆண் குழந்தைகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த குழந்தைகள் அனைத்தும் 9 வயதுக்குட்பட்ட குழந்தைகள். 

ADVERTISEMENT

தமிழகம் முழுவதும் 329 குழந்தைகள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

நேற்று தமிழக சுகாதாரத் துறை சென்னையில் தற்போது 3,350 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT