தமிழ்நாடு

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 40 பேருக்கு கரோனா; கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையவர்கள்

10th May 2020 02:57 PM

ADVERTISEMENT

 

கோயம்பேடு சந்தை மூலமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 40 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 264 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் கோயம்பேடு சந்தை மூலமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னை மட்டுமின்றி கோயம்பேடு சென்றுவந்த தமிழகம் முழுவதுமுள்ள பெரும்பாலான மாவட்டங்களைச் சேர்ந்தோர் பாதிக்கப்பட்டு வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

முக்கியமாக, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக பாதிப்பு இருந்து வருகிறது. 

ADVERTISEMENT

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 40 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையவர்கள் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் செங்கல்பட்டில் மொத்த பாதிப்பு 264 அதிகரித்துள்ளது.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT