தமிழ்நாடு

எம்.பி.க்களின் நடப்பாண்டுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியும் ரத்து: மு.க.ஸ்டாலின் கண்டனம்

10th May 2020 12:00 AM

ADVERTISEMENT

நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கான நடப்பாண்டுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியும் ரத்து செய்யப்பட்டுள்ளதற்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை 2 ஆண்டுகளுக்கு

( 2020-21 மற்றும் 2021-22) மட்டும் நிறுத்தி வைக்கிறோம் என்று மத்திய அரசு அறிவித்தது. இப்போது, 2019-20-ஆம் ஆண்டுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கி விட்ட நிலையில், அந்த நிதியையும் ரத்து செய்ய மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது. இது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, இந்த உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT