தமிழ்நாடு

கேரளத்தில் புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி

10th May 2020 06:52 PM

ADVERTISEMENT


கேரளத்தில் புதிதாக 7 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் தெரிவித்ததாவது:

கேரளத்தில் புதிதாக 7 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 3 பேர் வயநாட்டைச் சேர்ந்தவர்கள், 2 பேர் திருச்சூரைச் சேர்ந்தவர்கள் மற்றும் எர்ணாகுளம், மலப்புரத்திலிருந்து தலா ஒருவர்.

இதைத் தொடர்ந்து மொத்தம் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 20 ஆக உள்ளது. 4 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 489 பேர் குணமடைந்துள்ளனர்.

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT