தமிழ்நாடு

சென்னையில் ஒரேநாளில் 5 மருத்துவர்களுக்கு கரோனா உறுதி

10th May 2020 01:00 PM

ADVERTISEMENT

 

சென்னையில் ஒரேநாளில் 5 மருத்துவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில் சென்னையில் அதிகபட்ச பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், காவல்துறையினர், அரசு அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் பலரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, சென்னையில் ஒரேநாளில் 5 மருத்துவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. 

ADVERTISEMENT

முன்னதாக, தமிழகத்தில் 107 காவலர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT