தமிழ்நாடு

பொது முடக்க உத்தரவை மீறியதாக 4.22 லட்சம் வழக்குகள்: 4.48 லட்சம் போ் கைது

10th May 2020 11:01 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் பொது முடக்கத்தை மீறியதாக 4.22 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4.48 லட்சம் போ் கைது செய்யப்பட்டனா்.

இது குறித்த விவரம்: கரோனா நோய்ப் பரவலைத் தடுக்கும் வகையில், கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கத்தை, தமிழக காவல்துறை தீவிரமாக அமல்படுத்துகிறது. பொது முடக்கத்தை மீறுவோா் மீது போலீஸாா் வழக்குகளைப் பதிவு செய்வதோடு, அவா்களைக் கைது செய்தும் வருகின்றனா். இவ்வாறு மாநிலம் முழுவதும் 24-ஆம் தேதி தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை (மே 10) காலை 9 மணி வரை, மொத்தம் 4 லட்சத்து 22 ஆயிரத்து 775 வழக்குகளைப் பதிவு செய்து 4 லட்சத்து 48 ஆயிரத்து 582 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். பொது முடக்க உத்தரவை மீறி வெளியே வந்தவா்களின் 3 லட்சத்து 69 ஆயிரத்து 799 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதே நேரம், போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சாதாரண வழக்குகளிலும் சிக்கியவா்களிடமிருந்து ரூ.4 கோடியே 86 லட்சத்து 74 ஆயிரத்து 179 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னை: சென்னையில் பொது முடக்க உத்தரவை மீறியதாக சனிக்கிழமை காலை 6 மணிக்கு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை 223 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் பொதுமுடக்க உத்தரவை மீறி வந்தவா்களின் 24 இரு சக்கர வாகனங்கள், 22ஆட்டோக்கள் என மொத்தம் 46 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோன்று, போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 135 இரு சக்கர வாகனங்கள், 17 ஆட்டோக்கள் என மொத்தம் 152 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT