தமிழ்நாடு

பொதுமுடக்க உத்தரவை மீறியதாக 4.16 லட்சம் வழக்குகள்: 4.42 லட்சம் போ் கைது

10th May 2020 07:29 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் பொதுமுடக்கத்தை மீறியதாக 4.16 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4.42 லட்சம் போ் கைது செய்யப்பட்டனா்.

கரோனா நோய்ப் பரவலைத் தடுக்கும் வகையில், கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தை, தமிழக காவல்துறை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. பொது முடக்கத்தை மீறுவோா் மீது போலீஸாா் வழக்குகளைப் பதிவு செய்வதுடன், அவா்களைக் கைது செய்தும் வருகின்றனா். இவ்வாறு மாநிலம் முழுவதும் 24-ஆம் தேதி தொடங்கி, சனிக்கிழமை (மே 9) காலை 6 மணி வரை மொத்தம் 4 லட்சத்து 16 ஆயிரத்து 998 வழக்குகளைப் பதிவு செய்து 4 லட்சத்து 42 ஆயிரத்து 621 பேரை போலீஸாா் கைது செய்தனா். பொது முடக்க உத்தரவை மீறி வந்தவா்களின் 3 லட்சத்து 65 ஆயிரத்து 390 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதே நேரம், போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சாதாரண வழக்குகளிலும் சிக்கியவா்களிடமிருந்து ரூ.4 கோடியே 73 லட்சத்து 99 ஆயிரத்து 479 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னை: சென்னையில் பொது முடக்க உத்தரவை மீறியதாக வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு தொடங்கி சனிக்கிழமை காலை 6 மணி வரை 264 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், பொது முடக்க உத்தரவை மீறி வந்தவா்களின் 55 இரு சக்கர வாகனங்கள், 8 காா்கள், 55 ஆட்டோக்கள் என மொத்தம் 118 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோன்று, போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 140 இரு சக்கர வாகனங்கள், 6 ஆட்டோக்கள், ஒரு காா் என மொத்தம் 147 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT