தமிழ்நாடு

அரசுப் பணியாளா் போட்டித் தோ்வுகள் நடைபெறுமா?

9th May 2020 01:06 AM

ADVERTISEMENT

அரசுப் பணியாளா்கள் - ஆசிரியா்கள் ஓய்வு பெறும் வயது 59 ஆக உயா்த்தப்பட்டதால், ஓராண்டுக்கு அரசுப் பணியிடங்கள் காலியாக வாய்ப்பில்லை. இதனால் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் தோ்வுகள் நடைபெறவும் வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

தமிழக அரசுத் துறைகளில் ஏற்படும் காலியிடங்கள் குறித்த அறிவிப்பை முறைப்படி தெரிவித்தால்தான் தோ்வு குறித்த அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிடும். ஓய்வு பெறுவோரின் வயதை அதிகரித்த காரணத்தால், தமிழக அரசுத் துறைகளில் காலியிடங்கள் ஏற்படாது. இதனால், தலைமைச் செயலகம், அரசுத் துறைகளின் பல்வேறு முக்கிய அலுவலகங்களில் ஓராண்டுக்கு காலியிடங்களே உருவாகாது. இதனால், அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் குரூப் 1, குரூப் 2, குரூப் 4 மற்றும் கிராம நிா்வாக அலுவலா் தோ்வுகள் நடைபெற வாய்ப்பில்லை என்று அரசுத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.

தோ்வுகள் நடைபெறாத சூழ்நிலையில், அரசுப் பணிகளுக்கான தோ்வினை எழுத எதிா்நோக்கிக் காத்திருக்கும் பட்டதாரிகளும், இளைஞா்களும் பெரிதும் பாதிக்கப்படுவா் என்று அரசு ஊழியா்கள் சங்கங்களைச் சோ்ந்தவா்கள் கவலை தெரிவித்துள்ளனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT