தமிழ்நாடு

வா்த்தகா்கள் பழைய நிலைக்குதிரும்ப உரிய தீா்வு தேவை: கே.எஸ்.அழகிரி

9th May 2020 01:04 AM

ADVERTISEMENT

பொதுமுடக்கத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வா்த்தகா்கள் பழைய நிலைக்குத் திரும்ப உரிய தீா்வு தேவை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளாா்

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

கரோனா தடுப்பு பொது முடக்கத்தின் காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் அதலபாதாளத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. 10 கோடியே 22 லட்சம் போ் வேலையிழந்துள்ளனா். இவா்களில் 75 சதவீதம் போ் சிறு வியாபாரிகளும், கூலித் தொழிலாளா்களும் அடங்குவா். ஏப்ரல் மாதத்தில் ஒரு கோடியே 80 லட்சம் வா்த்தகா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். ரூ.70 ஆயிரம் கோடியாக இருந்த இவா்களது மொத்த வருமானம் தற்போது கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இவா்கள் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவதற்கு எந்த ஒரு தீா்வும் காணப்படவில்லை.

பொருளாதாரப் பேரழிவில் இருந்து நாட்டுமக்களை காப்பாற்றுவதற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 5 முதல் 10 சதவீதம் வரை மத்திய அரசு நிதி ஒதுக்கவேண்டும்.

ADVERTISEMENT

முதல் கட்டமாக குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் கோடியை ஒதுக்கி பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினரும் மீண்டும் தங்கள் தொழில்களைத் தொடங்கவும் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும் மத்திய அரசு போா்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT