தமிழ்நாடு

டாஸ்மாக் மூடல்: திருச்சியில் இனிப்பு வழங்கிக் கொண்டாடிய மக்கள் நீதி மய்யம் கட்சி

9th May 2020 01:12 PM

ADVERTISEMENT

 

திருச்சி: மதுக்கடைகளை மூட நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து திருச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

தமிழகத்தில் பொது முடக்கத்திலும் மதுக்கடைகளைத் திறந்துள்ள அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மதுக்கடைகளை மூட உத்தரவிடக் கோரியும்,  மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மே 17ஆம் தேதி  மதுக் கடைகளை இயங்க தடை விதித்தும், உடனடியாக டாஸ்மாக் கடைகளை மூடவும் உத்தரவிட்டது.

இது தமிழக பெண்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இதற்கு மகிழ்ச்சி தெரிவித்தும், தமிழக மக்களின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் இனிப்பு எடு, கொண்டாடு எனும் முழக்கத்துடன் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் திருச்சியில் அனைவருக்கும் வெள்ளிக்கிழமை இனிப்பு (லட்டுகள்) வழங்கினர்.

ADVERTISEMENT

இதன் ஒரு பகுதியாக திருச்சி கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட மதுக்கடைகள் முன்பாக பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தீர்ப்பைக் கொண்டாடினார்கள்.

இந்த நிகழ்ச்சியில்,  திருச்சி மத்திய மாவட்ட நற்பணி இயக்க செயலாளர் கே.ஜே. எஸ். குமார், கிழக்கு தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் சதீஷ்குமார், கிஷோர் குமார், வின்னர் மாணிக்கம், சிந்தாமணி கனகராஜ், பூபதி, நடராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT