தமிழ்நாடு

மலேசியாவில் இருந்து திருச்சி புறப்பட்ட 177 பயணிகள்

9th May 2020 08:22 PM

ADVERTISEMENT

கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு 177 பயணிகளுடன் சிறப்பு விமானம் புறப்பட்டது. 

வெளி நாட்டில் பணிபுரியும் தமிழா்கள், தமிழகம் திரும்ப அனுமதி பெறுவதற்கென உருவாக்கப்பட்ட இணையதளத்தில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா், தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்திருந்தனா். 

இந்த நிலையில் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு 177 பயணிகளுடன் சிறப்பு விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் வரும் பயணிகள் அனைவருக்கும் திருச்சி விமான நிலையத்தில்  தயார் நிலையிலுள்ள சுகாதார துறை அதிகாரிகள் இவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்கின்றனர். 

தொடர்ந்து அவர்களுக்கு தொற்று நோய் இல்லாத பட்சத்தில் அனைவரும் சேதுராப்பட்டியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் தனிமைப்படுத்தவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

ADVERTISEMENT

Tags : trichy
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT