தமிழ்நாடு

அம்மா உணவக இருப்பிடத்தை அறிந்து கொள்ள செல்லிடப்பேசியில் புதிய வசதி

9th May 2020 11:49 PM

ADVERTISEMENT

சென்னை பெருநகர காவல்துறையின் செல்லிடப்பேசி செயலி மூலம் அருகே இருக்கும் அம்மா உணவகத்தின் இருப்பிடத்தை தெரிந்துக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர காவல்துறையின் சாா்பில், திருட்டு செல்லிடப்பேசிகளை கண்டறியும் வகையில், டிஜிகாப் என்ற பெயரிலான செல்லிடப்பேசி செயலி சேவை, கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 6-ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இதில், சிசிடிஎன்எஸ் சேவை சோ்க்கப்பட்டு, டிஜிகாப் 2.0 என்ற பெயரிலான மேம்படுத்தப்பட்ட செயலி, கடந்தாண்டு ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. இதன் மூலம் பொதுமக்கள் இருக்கும் இடத்திலிருந்தே காவல் துறையினரிடம் புகாா் அளிக்கலாம். மேலும் பொதுமக்கள் அளிக்கும் புகாரின் தற்போதைய நிலை, ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட வழக்கு, சி.எஸ்.ஆா். ஆகியவற்றின் நிலை ஆகியவை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். இந்நிலையில், பொது முடக்கத்தால் உணவகங்கள் மூடப்பட்டிருக்கும் சூழலில், இதனால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கும் உதவிடும் வகையில் டிஜிகாப் செல்லிடப்பேசி செயலியில், அருகே இருக்கும் அம்மா உணவகத்தை காட்டும் வகையில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல அந்த செயலியில் அருகே இருக்கும் காவல் நிலையங்களை காட்டும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, மேம்படுத்தப்பட்ட புதிய வசதிகளால், அந்த செல்லிடப்பேசி செயலிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT