தமிழ்நாடு

கடையநல்லூர் அருகே யானைகளுக்கிடையே சண்டை: பெண் யானை பலி

9th May 2020 03:45 PM

ADVERTISEMENT

 

கடையநல்லூர் அருகே கருப்பாநதி அணைப் பகுதியில் யானைகளுக்கிடையே ஏற்பட்ட சண்டையில் 5 வயது பெண் யானை உயிரிழந்தது. 

கருப்பாநதி அணைக்கு நீர் வரும் பாதையில் யானை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் டாக்டர் செந்தில்குமார், கடையநல்லூர் வன அலுவலர் செந்தில்குமார், வனவர்கள் அருமைக்கொடி, லூமிக்ஸ், வனக்காப்பாளர்கள் ராமச்சந்திரன், பத்மாவதி, பாத்திமா பிர்தவ்ஸ், கடையநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலையில் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் முத்துகிருஷ்ணன், வன உயிரின மருத்துவர் மனோகரன் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் இறந்து கிடந்த யானையை உடற்கூறு ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து யானை அப்பகுதியிலேயே புதைக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை இரவு யானைகளுக்கு நடந்த சண்டையில் இந்த யானை கொல்லப்பட்டிருப்பதாகவும், இறந்த யானை ஐந்து வயது உடைய பெண் யானை எனவும் வனத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT