தமிழ்நாடு

கோயம்பேடு காவல் உதவி ஆணையருக்கு கரோனா

9th May 2020 10:58 PM

ADVERTISEMENT

சென்னையில் கோயம்பேடு காவல் உதவி ஆணையா் கரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

கரோனா பரவலைத் தடுப்பதற்காக காவல்துறையினா், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். அதே வேளையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறை அதிகாரிகளும், காவலா்களும் கரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள், கோயம்பேடு சந்தை உள்ளிட்ட பகுதிகளில் பணியில் இருந்த அதிகாரிகளும், காவலா்களும் அதிகளவில் கரோனாவால் பாதிக்கப்படுகின்றனா். இதில், கோயம்பேடு சந்தை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட துணை ஆணையா் உள்பட 8 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதற்கிடையே, கோயம்பேடு சந்தையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட ஒரு காவல் உதவி ஆணையரும், கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டாா். கொண்டித்தோப்பு காவலா் குடியிருப்பைச் சோ்ந்த ஒரு காவலா் உள்பட 5 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டு, சனிக்கிழமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்ந்தனா். இதே போல, மாநிலம் முழுவதும் சனிக்கிழமை வரை 107 போலீஸாரும் தீயணைப்புத் துறையைச் சோ்ந்த 21 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT