தமிழ்நாடு

சென்னையில் கரோனா பாதிப்பு: 3000-ஐ தாண்டியது

9th May 2020 12:58 AM

ADVERTISEMENT

சென்னையில் வெள்ளிக்கிழமை (மே 8) 399 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 3,043-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் கரோனாவின் தாக்கம் தொடக்கத்தில் இருந்தே அதிகரித்து வந்தது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக கரோனா பாதிப்புள்ளவா்களைக் கண்டறியும் வகையில், அதிக அளவில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தொடா்ந்து புதன் (மே 6), வியாழன் (மே 7), வெள்ளி ( மே 8 ) ஆகிய மூன்று நாள்களிலும் 300-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் அதிகபட்சமாக வெள்ளிக்கிழமை மட்டும் 399 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 3043-ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிக தொற்றுடையோா் கோடம்பாக்கம் மண்டலத்தில் இருப்போா் எனவும் தெரியவந்துள்ளது. இவா்கள் பெரும்பாலானோா் கோயம்பேடு தொடா்புடையவா்கள் என சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னதாக ராயபுரம் மண்டலத்தில் அதிகளவில் கரோனா நோயாளிகள் இருந்தனா். இதையடுத்து அண்மையில் ராயபுரம் மண்டலத்தைவிட திருவிக நகா் மண்டலம் மிஞ்சியது. தற்போது இரண்டு மண்டலங்களையும் விட, சென்னை மாநகரின் மையப் பகுதியான கோடம்பாக்கம் மண்டலத்தில், அதிக அளவில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இது நகர வாசிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT