தமிழ்நாடு

நெல்லையில் மேலும் 8 பேருக்கு கரோனா: பாதிப்பு 80 ஆக உயர்வு

9th May 2020 01:22 PM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி மாவட்டத்தில் சனிக்கிழமை புதிதாக மேலும் 8 பேருக்கு கரோனா  நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா தனிமை சிகிச்சைப் பிரிவில் கடந்த வியாழக்கிழமை வரை 68 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் 58 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மேலப்பாளையத்தைச் சேர்ந்த முதியவர் மட்டும் உயிரிழந்தார். 

இதையடுத்து, திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்தது. 

ADVERTISEMENT

இந்நிலையில், வள்ளியூர் சித்தூர் பகுதியைச் சேர்ந்த 7 பேர், பேட்டை அருகே உள்ள நடுக்கல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 8 பேருக்கு கரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
எனவே, இதுவரை திருநெல்வேலி மாவட்டத்தில்  கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT