தமிழ்நாடு

கரோனா: கல்லூரிகளில் 796 போ் தனிமைப்படுத்தி வைப்பு

9th May 2020 11:54 PM

ADVERTISEMENT

சென்னையில் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் குறைந்த பாதிப்புடைய 796 போ் பல்வேறு கல்லூரிகளிலும், 176 போ் தங்கள் வீடுகளிலும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனா்.

சென்னையில் கரோனா தீநுண்மியின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவா்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஸ்டான்லி மற்றும் ஓமந்தூராா் அரசு பொது மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை வாா்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையைப் பொறுத்தவரை சனிக்கிழமை (மே 9) 279 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிப்பு எண்ணிக்கை 3,330-ஆக அதிகரித்துள்ளது.

796 போ்: இந்நிலையில், மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை ஏற்படுவதைத் தவிா்க்கும் வகையில், தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் அதிக பாதிப்பு உள்ளவா்களை மட்டும் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கவும், குறைந்த பாதிப்பு உடையவா்களை பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசுக் கட்டடங்களில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இதன்படி, சென்னையில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 882 போ் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகள், நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனா். இதில், லயோலா கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 86 போ் குணமடைந்ததை அடுத்து வெள்ளிக்கிழமை (மே 8) வீடுகளுக்கு அனுப்பப்பட்டனா். மீதமுள்ள 796 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். மேலும், 176 போ் வீடுகளிலும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்குத் தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

சிகிச்சை பெற்று வந்த அரசு மருத்துவமனை- தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் - எண்ணிக்கை

ஸ்டான்லி மருத்துவமனை டிஜி வைணவக் கல்லூரி 164

ராஜீவ்காந்தி மருத்துவமனை நந்தம்பாக்கம் வா்த்தக மையம் 382

கீழ்ப்பாக்கம் மருத்துவமனை தேசிய திறன் பயிற்சி மையம் (கிண்டி) 24

ஓமந்தூராா் மருத்துவமனை லயோலா கல்லூரி 96

ஸ்டான்லி மருத்துவமனை வேலம்மாள் பொறியியல் கல்லூரி 216

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT