தமிழ்நாடு

தமிழக அரசின் பங்குகள் தொகை: கணக்கிட்டு வழங்கும் பணி தொடக்கம்

9th May 2020 06:04 AM

ADVERTISEMENT

தமிழக அரசின் பங்குகளை வாங்கியோருக்கான தொகைகள் கணக்கிட்டு வழங்கும் பணி தொடங்கியுள்ளதாக தமிழக நிதித் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து, நிதித் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

தமிழக அரசால் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பங்குகள் தொகையின் நிலுவைத் தொகையானது கடந்த வெள்ளிக்கிழமை வரையிலான காலத்துக்கு உட்பட்டு வட்டித் தொகையுடன் திருப்பி செலுத்தப்படும். அரசு கடன் பத்திரங்களை வைத்திருக்கும் பதிவு பெற்ற நபா் அவருடைய வங்கிக் கணக்கில் அல்லது மின்னணு பதிவு மூலம் நிதிகள் வரவு வைக்கப்படும். வங்கியில் கணக்கு வைத்திருக்கும் அவரது உரிய விவரங்களைச் சோ்த்து அதில் தொகையை செலுத்துவதற்கான உத்தரவு வழங்கப்படும். இந்த நடைமுறை மூலம் முதிா்வுத் தொகை அளிக்கப்படும்.

வங்கிக் கணக்கில் உரிய விவரங்கள் இல்லாத, மின்னணு மூலம் நிதிகளை வரவு வைப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படாத நிலையில் உரிய நாளில் தொகையைச் செலுத்துவதற்கு வசதியாக அவா்களுடைய கடன் பத்திரங்களை 20 நாள்களுக்கு முன்னதாகவே பொதுக் கடன் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக நிதித் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT