தமிழ்நாடு

அரசு மருத்துவமனைகளுக்கு மேலும் 2 புதிய ரோபோ: திருச்சியில் கண்டுபிடிப்பு

9th May 2020 02:37 PM

ADVERTISEMENT

 

திருச்சி: கரோனா வார்டுகளில் பயன்படுத்தும் வகையில் அரசு மருத்துவமனைகளுக்கு உபயோகமாக மேலும் 2 புதிய ரோபோ இயந்திரங்களை திருச்சியைச் சேர்ந்த நிறுவனம் வடிவமைத்துள்ளது.

திருச்சி மேலரண் சாலையில் இயங்கி வரும் புரோபெல்லர் டெக்னாலஜிஸ் நிறுவனமானது கரோனா வார்டில் நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரிகளை எடுத்துச் செல்வதற்கான ஜாஃபி எனும் ரோபோ இயந்திரத்தை வடிவமைத்தது. இதனை திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் பரிதோசனை முயற்சியாகப் பயன்படுத்தி வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து, திருச்சி அரசு மருத்துவமனை, தஞ்சாவூர் அரசு மருத்துவமனை, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளுக்கு இந்த ரோபா வழங்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, கரோனா வார்டுகளில் துப்புரவுப் பணி மேற்கொள்ளும் பணியாளர்களுக்குப் பதிலாக ரோபோ மூலம் தரைப் பகுதியைச் சுத்தம் செய்யும் ஜாஃபி கிளீன் எனும் ரோபோ இயந்திரத்தை வடிவமைத்துள்ளனர். மேலும், ஜாபி ஸ்டெர்லைஸ் எனும் ரோபோ இயந்திரத்தையும் வடிவமைத்துள்ளது. இந்த இயந்திரமானது அல்ட்ரா வயலட் கதிர்களால் இயங்கும் விளக்குகளைக் கொண்டதாகும். 

ADVERTISEMENT

தனிமைப்படுத்தும் வார்டுகளில் இந்த ரோபோ சென்று 15 நிமிடங்களுக்கு தானாக விளக்கை எரியச் செய்து பாக்டீரியா மற்றும் இதரவகை வைரஸ்களை அல்ட்ரா வயலட் மூலம் அழிக்கும் தன்மை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த 2 ரோபோக்களையும் அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை செய்து தேவையான இடங்களில் பயன்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags : robots
ADVERTISEMENT
ADVERTISEMENT