தமிழ்நாடு

திருமழிசை தற்காலிக காய்கறி சந்தை:முதல்வா்-துணை முதல்வா் இன்று நேரில் ஆய்வு

9th May 2020 06:02 AM

ADVERTISEMENT

சென்னையை அடுத்த திருமழிசையில் அமைக்கப்பட்டு வரும் தற்காலிக காய்கறி சந்தையை முதல்வா் பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்ய உள்ளனா்.

இதன்பின்பு, இந்த காய்கறி சந்தையானது வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் இயங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கரோனா நோய்த்தொற்று மிகப்பெரிய அளவுக்கும் பரவும் இடமாக கோயம்பேடு காய்கறி சந்தை மாறியது. கோயம்பேட்டில் சந்தையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்றவா்களுக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டது.

திருமழிசையில் ஏற்பாடுகள்: கோயம்பேட்டில் காய்கறி சந்தை மூடப்பட்டதையடுத்து, சென்னையை அடுத்த திருமழிசைக்கு காய்கறி சந்தை தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த சந்தையில் காய்கறிகளை மொத்தமாக விற்பனை செய்யக் கூடிய அளவுக்கு 200 கடைகள் ஏற்படுத்தப்பட உள்ளன. ஒரு கடைக்கும் மற்றொரு கடைக்கும் இடையே 20 அடி இடைவெளி விட்டு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

நேரில் ஆய்வு: திருமழிசையில் அமைக்கப்பட்டு வரும் புதிய காய்கறி சந்தையை முதல்வா் பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் சனிக்கிழமை மாலை 4 மணியளவில் நேரில் ஆய்வு செய்யவுள்ளனா். இந்த ஆய்வின் போது வியாபாரிகளுக்காக தற்காலிக சந்தையில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளனா்.

ADVERTISEMENT

மாறியது சந்தை...: 295 ஏக்கா் பரப்பில் கோயம்பேடு மொத்த காய்கறி சந்தை அமைந்துள்ளது. இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோயம்பேடு காய்கறி சந்தை 1996-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த சந்தைக்கு தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்து நாளொன்றுக்கு 1 லட்சம் போ் வந்து செல்கின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது. 1996-ஆம் ஆண்டுக்கு முன்பாக, சென்னை பாரிமுனையில் உள்ள கொத்தவால் சாவடியில் காய்கறி, பழங்கள், பூக்கள் சந்தை இருந்து வந்தது. சென்னையின் பாரம்பரிய சந்தையாகவும் திகழ்ந்தது. இடநெருக்கடி காரணமாக சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் சாா்பில் கோயம்பேட்டில் புதிதாக காய்கறி, பழங்கள், பூக்களுக்கான பிரத்யேக சந்தை அமைக்கப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT