தமிழ்நாடு

தமிழகத்தில் ஒரேநாளில் ரூ. 170 கோடிக்கு மது விற்பனை; மதுரை மண்டலம் முதலிடம்

8th May 2020 12:22 PM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ. 170 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளன.

தமிழகத்தில் சென்னை நீங்கலாக மற்ற அனைத்துப் பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்பட்டன. டாஸ்மாக் கடைகளில் போலீஸ் பாதுகாப்பு, வயதினருக்கு ஏற்ப விற்பனை நேரம் என சில கட்டுப்பாடுகளுடன் மது விற்பனை நடந்தது.

ஊரடங்கு காரணமாக கடந்த 40 நாள்களுக்கும் மேலாக மதுக்கடைகள் மூடப்பட்ட நிலையில், நேற்று கடைகள் திறந்ததையொட்டி, மதுப்பிரியர்கள் ஆர்வத்துடன் மதுவாங்க வந்தனர். அனைத்துப் பகுதிகளிலும் நீண்ட வரிசையில் வெகு நேரம் காத்திருந்து 'குடிமகன்கள்' மது வாங்கிச் சென்றனர். 

ADVERTISEMENT

இந்நிலையில், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ. 170 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

இதில் மதுரை மண்டலத்தில் அதிகபட்சமாக நேற்று ரூ. 37 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. திருச்சியில் ரூ. 32 கோடி, சேலத்தில் ரூ. 33 கோடி, கோவையில் ரூ. 34 கோடி, நெல்லையில் ரூ. 32 கோடி என்ற அளவில் மதுபானங்கள் விற்பனை நடந்துள்ளன. சென்னையிலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டிருந்தால் டாஸ்மாக் வசூல் ரூ. 250 கோடியை எட்டியிருக்கும் எனக் கூறப்படுகிறது. 

Tags : Tasmac
ADVERTISEMENT
ADVERTISEMENT