தமிழ்நாடு

தினமணி செய்தி எதிரொலி: கூத்தாநல்லூரில் தரமான முகக்கவச விற்பனை

8th May 2020 09:57 PM

ADVERTISEMENT

தினமணி செய்தி எதிரொலியைத் தொடர்ந்து கூத்தாநல்லூரில் தரமான முகக்கவசத்தை விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் கடையில் விற்கக்கூடிய முகக்கவசங்கள் பாதுக் காப்பாற்ற நிலையிலும், கூடுதலான விலையிலும் விற்பனை செய்யப்படுவதாக தினமணியில் அண்மையில் செய்தி வெளியானது. இந்த நிலையில் கூத்தாநல்லூரில் நாளை முதல் தரமான முகக்கவசத்தை விற்பனை செய்ய திருவாரூர் மாட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். 

இதுதொடர்பாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் உத்தரவுப்படி, திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுத் திட்ட செயலாக்க அலகின் மூலம், கரோனா தொற்று நோய்த் தடுப்புக்காகவும், பொதுமக்களின் பாதுக்காப்புக்காகவும் குறைந்த விலையில், தரமான முகக்கவசம் ரூ .10க்கு, நாளை 9 ம் தேதி விற்பனை செய்யப்படுகிறது. 

நகராட்சி ஆணையர் லதா ஏற்பாட்டின்படி, கூத்தாநல்லூர் லெட்சுமாங்குடிப் பாலம், மேலத்தெரு இந்தியன் வங்கி மற்றும் அரசு மருத்துவமனை. 

ADVERTISEMENT

Tags : Curfew
ADVERTISEMENT
ADVERTISEMENT