தமிழ்நாடு

சீர்காழி புறவழிச்சாலையில் பறவைகளை வேட்டையாடிய நான்கு பேர் கைது

8th May 2020 12:52 PM

ADVERTISEMENT

 

சீர்காழி புறவழிச்சாலையில் பறவைகளை வேட்டையாடிய நான்கு பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புறவழிச்சாலையில் உள்ள வனப்பகுதியில் சிலர் தொடர்ந்து பறவைகள் வேட்டையில் ஈடுபடுவதாக சீர்காழி வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற வனச்சரகர் குமரேசன் தலைமையிலான வனக்காவலர்கள் பறவைகளை வேட்டையாடிய நான்கு பேரை சுற்றி  வளைத்து பிடித்தனர்.

விசாரணையில் சீர்காழி பிடாரி தெற்கு வீதியை சேர்ந்த  ஜார்ஜ் பிரபாகன்(53), திருத்தலமுடையார் கோவில் தெருவைச் சேர்ந்த வெற்றிச்செல்வம்(28), ஜெகநாதபுரம் ஹரிஹரன்(23), தென்பாதிரமேஷ் (40) என இவர்கள் உரிமம் இல்லாத துப்பாக்கியை வைத்து பறவைகளை வேட்டையாடியதும் தெரியவந்தது.

ADVERTISEMENT

இதனையடுத்து நான்கு பேரையும் வியாழக்கிழமை மாலை கைது செய்த வனத்துறையினர் அவர்களிடம் இருந்து இரண்டு துப்பாக்கிகள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். கைது செய்யபட்ட நால்வரும் சீர்காழி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT