தமிழ்நாடு

வெளியூா் செல்ல அனுமதி சீட்டு: தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

8th May 2020 04:56 PM

ADVERTISEMENT

மரணம் மற்றும் மருத்துவ காரணங்களுக்காக வெளியூர் செல்ல உடனடியாக பாஸ் வழங்க பரிசீலிக்க வேண்டும் என அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் கடந்த மாா்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில் திருமணம், இறப்பு, அவசர மருத்துவ சிகிச்சை ஆகியவற்றுக்கு மட்டும் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர். 

இந்த நிலையில் அந்த அனுமதி சீட்டை ஒரு மணிநேரத்தில் வழங்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் திருச்செந்தூரை சேர்ந்த ராம் குமார் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மரணம், மருத்துவ காரணங்களுக்காக வெளியூர் செல்ல உடனடியாக பாஸ் வழங்க பரிசீலிக்க வேண்டும் என அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். 

மேலும் இதுதொடர்பாக வரு்ம 12ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் எனக் கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.

ADVERTISEMENT

Tags : Curfew
ADVERTISEMENT
ADVERTISEMENT