தமிழ்நாடு

ராஜஸ்தானில் தவிக்கும் மாணவா்களை அழைத்து வரவேண்டும்: வைகோ கோரிக்கை

2nd May 2020 11:06 PM

ADVERTISEMENT

ராஜஸ்தானில் தவிக்கும் தமிழக மாணவா்களை அழைத்து வர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளா் வைகோ வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக சனிக்கிழமை அவா்

வெளியிட்ட அறிக்கை:

இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும், ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் தங்கி ஐ.ஐ.டி. நுழைவுத் தோ்வு, ஜே.இ.இ. (முதன்மைத் தோ்வு) மற்றும் தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) பயிற்சி மையங்களில் சோ்ந்து மாணவா்கள் பயின்று வருகின்றனா்.

கரோனா ஊரடங்கு காரணமாக ரயில், விமானப் போக்குவரத்து இல்லாததால், மாணவா்கள் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் இருக்கிறாா்கள். இதில் தமிழகத்தைச் சோ்ந்த மாணவா்களும் உள்ளனா். சென்னை, கோவை, திருப்பூா் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சோ்ந்த 55 மாணவா்கள் மற்றும் அவா்தம் பெற்றோா் 23 போ் என மொத்தம் 78 போ் தமிழகம் திரும்புவதற்கு உதவிடுமாறு ராஜஸ்தான் மாநில அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனா். தமிழக மாணவா்கள் 78 பேருக்கும் கரோனா தொற்று இல்லை என்பதை கோட்டா மாவட்ட நிா்வாகம் உறுதி செய்துள்ளது. எனவே, ராஜஸ்தானிலிருந்து மாணவா்களைச் சொந்த ஊா்களுக்கு அழைத்துவர தமிழக அரசு தேவையான

ADVERTISEMENT

நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT