தமிழ்நாடு

ஈரோட்டில் அதிமுக சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உணவுப் பொருள்கள் அளிப்பு

2nd May 2020 01:13 PM

ADVERTISEMENT

 

ஈரோட்டில் 300-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மாநகர் மாவட்ட அதிமுக  சார்பில் அரிசி, காய்கறிகள், அடங்கிய அத்தியாவசிய பொருள்கள் அடங்கிய தொகுப்புகளை சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.வி.இராமலிங்கம், கே.எஸ். தென்னரசு ஆகியோர்  இன்று வழங்கினர். 

ஈரோடு நகர்ப் பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது.  

இதில் எம்.எல்.ஏ.க்கள் கே.வி.இராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் கலந்துகொண்டு 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வழங்கினர். மேலும் முகக் கவசங்கள், கிருமி நாசினி திரவம் வழங்கப்பட்டன.  இதில் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT