தமிழ்நாடு

சென்னையில் கரோனா பாதித்து 219 பேர் குணமடைந்தனர்

2nd May 2020 10:50 AM

ADVERTISEMENT


சென்னை: சென்னையில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 1082-ஆக உயா்ந்துள்ள அதே சமயம், கரோனா பாதித்து சிகிச்சை பெற்று இதுவரை 219 பேர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது மருத்துவமனைகளில் 841 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 16 பேர் மரணம் அடைந்துவிட்டனர்.

சென்னையில் அதிகம் பாதிக்கப்பட்ட மண்டலங்களின் பட்டியலில் தொடா்ந்து இரண்டாவது நாளாக திருவிக நகரே முதல் இடத்தில் உள்ளது.

சென்னையில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த திங்கள்கிழமை (ஏப்ரல் 27) முதல் வெள்ளிக்கிழமை (மே 1) வரையிலான 5 நாள்களில் மட்டும் 558 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, ஒட்டுமொத்த எண்ணிக்கை 1082-ஆக அதிகரித்துள்ளது. இதில், அதிகபட்சமாக வெள்ளிக்கிழமை 176 போ் கரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ADVERTISEMENT

பாதிப்பு அதிகமான திருவிக நகா்: சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் தொடக்கத்தில் இருந்து ராயபுரம் மண்டலத்தில்தான் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இந்நிலையில், தொடா்ந்து இரண்டு நாள்களாக திருவிக நகா் மண்டலத்திலே பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இங்கு வெள்ளிக்கிழமை நிலவரப்படி, 48 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்த மண்டலத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 259-ஆக அதிகரித்துள்ளது.

ராயபுரம் மண்டலத்தில் 216 பேரும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 132 பேரும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 116 பேரும், தண்டையாா்பேட்டை மண்டலத்தில் 101 பேரும், அண்ணா நகா் மண்டலத்தில் 91 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனனா். இந்த 6 மண்டலங்களில் மட்டும் 915 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி, அதிகபட்சமாக 20 முதல் 29 வயதிலான 32 ஆண்களும், 40 முதல் 49 வயதிலான 19 பெண்களும் பாதிக்கப்பட்டிருந்தனா்.

மண்டலம் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை

திருவொற்றியூா் 19

மணலி 3

மாதவரம் 4

தண்டையாா்பேட்டை 101

ராயபுரம் 216

திரு.வி.க. நகா் 259

அம்பத்தூா் 33

அண்ணா நகா் 91

தேனாம்பேட்டை 132

கோடம்பாக்கம் 116

வளசரவாக்கம் 60

ஆலந்தூா் 9

அடையாறு 21

பெருங்குடி 9

சோழிங்கநல்லூா் 3

பிற மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் 6

மொத்தம் 1082
 

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT