தமிழ்நாடு

வண்டலூர், திருவான்மியூரில் காய்கறி வியாபாரிகளுக்கு கரோனா

2nd May 2020 04:04 PM

ADVERTISEMENT


சென்னை: கோயம்பேடு சந்தையில் காய்கறிகளை வாங்கி வந்து விற்பனை செய்து வந்த வண்டலூர் மற்றும் திருவான்மியூரைச் சேர்ந்த இரண்டு வியாபாரிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே கோயம்பேடு காய்கறி சந்தையில் வியாபாரிகள் உட்பட 50 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது கோயம்பேடு சந்தையில் காய்கறிகளை வாங்கிச் சென்று விற்பனை செய்து வந்த இரண்டு வியாபாரிகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் பகுதியில், கோயம்பேடு சந்தையில் இருந்து காய்கறிகளை வாங்கிச் சென்று விற்பனை செய்து வந்த வியாபாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருவான்மியூரில் காய்கறி சந்தையில், கடந்த வாரம் கட்டுக்கடங்காத கூட்டம் காய்கறி வாங்க அலைமோதிய நேரத்தில், தற்போது கரோனா பாதித்த வியாபாரியும் காய்கறி விற்பனை செய்துள்ளார். இவர் அடையாறு பகுதியைச் சேர்ந்தவர்.

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT