தமிழ்நாடு

சென்னையில் 233 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்

2nd May 2020 03:11 PM

ADVERTISEMENT


சென்னையில் கரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டு மேலும் 31 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டதால், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 233 ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த ஏப்ரல் 28ம் தேதி 202 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ராயபுரத்தில் மட்டும் 56 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளும், திருவிக நகரில் 49 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளும், தண்டையார்பேட்டையில் 25 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளும் உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

15 மண்டலங்களைக் கொண்ட சென்னை மாநகராடசியில் 9 மண்டலங்களில் ஒற்றை இலக்கங்களில்தான் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. மணலியில் ஒரு பகுதியும், சோலிங்கநல்லூர், ஆலந்தூர் பகுதிகளில் தலா இரண்டு பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன.
 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT