தமிழ்நாடு

சென்னையில் இதுவரை 350 கடைகளுக்கு சீல்: மாநகராட்சி தகவல்

2nd May 2020 12:32 AM

ADVERTISEMENT

விதிகளைப் பின்பற்றாமல் செயல்பட்ட 350 கடைகளுக்கு சீல் வைத்திருப்பதாக சென்னை மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். குறிப்பாக, சென்னையில் அதன் தாக்கம் மிகத் தீவிரமாக உள்ளது. நோய்த்தொற்று பரவலைத் தடுக்க மாநகராட்சி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில், அத்தியாவசிய பொருள்கள் விற்கும் கடைகளுக்கு மட்டும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை அனுமதியளித்துள்ளது. இந்த நேரக் கட்டுப்பாட்டில், கடைகள் பின்பற்றவேண்டிய நிபந்தனைகளை மாநகராட்சி வெளியிட்டது.

அதில், பொருள்கள் வாங்க வருவோரை, கடை உரிமையாளா்கள் தகுந்த இடைவெளியுடன் நிறுத்திவைக்க வேண்டும், 1 மணிக்கு சரியாக கடைகளை மூடி விடவேண்டும் போன்ற நிபந்தனைகளை மாநகராட்சி வெளியிட்டது. இதுவரை நிபந்தனைகளைப் பின்பற்றாமல் இயங்கிய 350 கடைகளுக்கு சீல் வைத்திருப்பதாக சென்னை மாநகராட்சி ஆணையா் பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT