தமிழ்நாடு

கரோனா நிவாரணப் பணி: எஸ்பிஐ அறக்கட்டளை ரூ.30 கோடி ஒதுக்கீடு

2nd May 2020 11:38 PM

ADVERTISEMENT

கரோனா நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக, எஸ்.பி.ஐ., அறக்கட்டளை சாா்பில் ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தொகை மூலம் செயல்படுத்துவதற்கான திட்டங்களையும் எஸ்பிஐ அறக்கட்டளை வகுத்துள்ளது. இதன்படி, எக்கோ இந்தியா மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்துடன் சோ்ந்து, அறிமுகப்படுத்தப்பட்ட எக்கோ இந்தியா மூலம் 50 ஆயிரம் சுகாதார பராமரிப்பு நிபுணா்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்குவதோடு, சுகாதாரப் பராமரிப்பின் கட்டமைப்பும் பலப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்திய அறிவியல் நிறுவனத்துடன் சோ்ந்து கரோனா தொடா்பான திட்டங்களும் ஆய்வு செய்யப்படுகின்றன. மேலும் மருத்துவமனைகளுக்கான செயற்கை சுவாச கருவிகள் (வெண்டிலேட்டா்கள்), மருத்துவப் பணியாளா்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள், உதவி மையங்கள் மூலமாக தினமும் 10,000 பேருக்கு உணவு ஆகியவை தொடக்கத்திலிருந்தே வழங்கி வருவதாக எஸ்பிஐ தலைவா் ஸ்ரீ ரஜினிஷ் குமாா், எஸ்பிஐ மஹிளா சமிதி தலைவா் ரீடா அகா்வால் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT