தமிழ்நாடு

நவீன கிருமி நாசினி தெளிப்பான் வடிவமைத்து ராணிப்பேட்டை பெல் நிறுவனம் சாதனை

30th Mar 2020 04:09 PM

ADVERTISEMENT


ராணிப்பேட்டை மாவட்டத்தில் நான்கே நாட்களில் நவீன கிருமி நாசினி தெளிப்பான் வடிவமைத்து சாதனை படைத்தது பெல் நிறுவனம். 

கரோனா நோய்த் தொற்று தடுப்பு துரித நடவடிக்கைக்காக நான்கே நாட்களில் "பெல் மிஸ்டர்'' என புதிய நவீன கிருமி நாசினி தெளிப்பான் வடிவமைத்து, மாவட்ட நிர்வாகத்தின்  பயன்பாட்டுக்கு வழங்கி ராணிப்பேட்டை பெல் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.

இது குறித்து பெல் நிறுவனம் தெரிவித்திருப்பதாவது:

ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் கரோனா நோய்த் தொற்றுக்கு எதிராகத் துரித நடவடிக்கை  எடுத்து வருகிறது.அந்த துரித நடவடிக்கைக்கு துணை நிற்கும் வகையில், நமது  நாட்டின்  மகாரத்னா அந்தஸ்து பெற்ற  நிறுவனமான பாரத மிகுமின் (பெல்) நிறுவனத்தின் அங்கமாய் ராணிப்பேட்டை தொழிற்பேட்டையில் அமைந்துள்ள கொதிகலன் துணை (பி.ஏ.பி.) ஆலை கைகோர்த்து பொது இடங்களில் கிருமித் தொற்று நீக்கும் வகையில் புதிய நவீன கிருமி நாசினி தெளிப்பான் கருவியை உருவாக்கித் தந்துள்ளது.இந்த புதிய நவீன தெளிப்பான் கருவி மூலம் குறைவான கிருமி நாசினி மருந்தைப்  பரவலான இடங்களில் தெளிக்கும் வண்ணம்  வடிவமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கொவைட் -19 என்னும் கரோனா நோய்க் கிருமித் தொற்றில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய நவீன கருவிக்கான தொடக்கப்பணி மார்ச் 25ம் தேதி தொடங்கப்பட்டு, பெல் நிறுவன ஊழியர்களின் அயராது உழைப்பின் பயனாக மார்ச் 28ம் தேதி முடிக்கப்பட்டு, ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகத்திடம் செயல் திறன் பரிசோதனை செய்து காண்பித்து ஒப்படைக்கப்பட்டது.

பாரத மிகுமின் நிறுவன பி.ஏ.பி.ஆலை ஊழியர்கள் 20 பேர் கொண்ட குழுவினர் குறுகிய காலத்தில் நிறைவேற்றி இருப்பது பெல் நிறுவனத்தின் அயராது உழைப்புக்கு ஒரு சிறிய உதாரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT