தமிழ்நாடு

தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் ஒத்திவைப்பு

30th Mar 2020 10:43 AM

ADVERTISEMENT

சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் 1ம்  தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட இருந்த  ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

திருவாரூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், தற்போது தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமில்லை என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சோதனை முறையாக ஏற்கனவே தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT