தமிழ்நாடு

ஆம்பூர் அருகே காடுகளுக்கு தீ வைத்து வனவிலங்குகளை வேட்டையாட முயன்றவர் கைது

DIN

ஆம்பூர் அருகே காடுகளுக்கு தீ வைத்து வனவிலங்குகளை வேட்டையாட முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆம்பூர் வனச்சரகத்தில் மேற்குப் பகுதியில் ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்ட கௌண்டன்யா வனவிலங்குகள் சரணாலயம் காப்புக் காடுகளை ஒட்டி காரப்பட்டு காப்பு காடுகள் உள்ளன. கடந்த சில தினங்களாக இந்த காரப்பட்டு காப்புக்காடு பகுதியில் தீ வைப்பு சம்பவங்கள் நடந்து வந்தன. திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலர் முருகன் உத்தரவின்பேரில் ஆம்பூர் வனசரகர் மூர்த்தி தலைமையில் வனவர்கள், வனக்காப்பாளர்கள் மற்றும் வனக்காவலர்கள் அன்றாடம் காப்புக் காடுகள் பகுதியை கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று காரப்பட்டு காப்புக் காடுகள் பகுதிகளான முனியப்பன் ஏரி, எம்.ஜி.ஆர் நகர் பகுதி மற்றும் மாதகடப்பா பகுதிகளில் மீண்டும் காடுகள் கொழுந்து விட்டு எரிந்து வந்தது. கொழுந்துவிட்டெரியும் காடுகள் பகுதிக்கு மாவட்ட வன அலுவலர் முருகன், ஆம்பூர் வனசரகர் மூர்த்தி, வனவர் சம்பத்குமார் வனக்காப்பாளர்கள் விசுவநாதன், செந்தில், மகேஷ் வனக்காவலர் அசன் நிசாருதீன் ஆகியோர் தீப்பற்றி எரிந்து வரும் பகுதிகளை அணைக்கும் முயற்சியிலும், தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபடுவோரை கண்காணிக்கும் பணியிலும் ஈடுபட்டனர்.

அப்போது அரங்கல்துருகம் அடுத்த மத்தூர்கொல்லை பகுதியின் அருகே தேவுடு கானாறு வனப்பகுதியில் துப்பாக்கியுடன் ஒருவர் பதுங்கி இருப்பதை கையும் களவுமாக பிடித்தனர். அவரை விசாரணை செய்ததில் சின்ன கொல்லக்குப்பம் குப்பத்தை சேர்ந்த அபிமன்னன் த/ பெ சின்னராஜ் .வயது 40 என்பதும் , காடுகளுக்கு தீ வைத்துவிட்டு தீயின் வெப்பம் தாங்காமல் ஓடிவரும் வனவிலங்குகளை வேட்டையாட பதுங்கி இருப்பதும் தெரிய வந்தது. காப்புக் காட்டில் துப்பாக்கியுடன் பிடிபட்டவரை ஆம்பூர் வனச்சரக அலுவலகத்துக்கு கொண்டு வந்து விசாரணை செய்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக ஆம்பூர் வனச்சரகத்தில் சாரங்கல், பாலூர், வெங்கிளி, ராள்ளக்கொத்தூர், காட்டு வெங்கடாபுரம், மாதகடப்பா பகுதிகளில் காப்புக் காடுகள் தீப்பற்றி எரிந்து வருவதால் வனவிலங்கு ஆர்வலர்களிடையே பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே வனத்துறையினர் காப்பு காடுகள் பகுதியைத் தொடர்ந்து கண்காணித்து, தீ வைப்பு சம்பவங்கள் ஈடுபடுவோர் மீதும், வன விலங்குகளை வேட்டையாடுவோர் மீதும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கூறுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

SCROLL FOR NEXT