தமிழ்நாடு

350 குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி பை வழங்கிய முன்னாள் ஊராட்சி தலைவர்

30th Mar 2020 11:33 AM

ADVERTISEMENT

கும்மிடிப்பூண்டி அடுத்த ரெட்டம்பேடு பகுதியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் கே.ஆர்.கே.முரளி ரெட்டம்பேடு பகுதியை சேர்ந்த 350 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு 5 கிலோ அரிசியை வழங்கினார்.

ரெட்டம்பேடு ஊராட்சியில் இரு முறை தொடர்ந்து தலைவராக இருந்தவர் கே.ஆர்.கே.முரளி. ரெட்டம்பேடு ஊராட்சியில் ரெட்டம்பேடு, குருவியகரம் பகுதிகளில் கரோனா ஊரடங்கின் காரணமாக பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதனை அறிந்து முன்னாள் ஊராட்சி தலைவர் கே.ஆர்.கே.முரளி அவரது சார்பில் ஊராட்சியை சேர்ந்த 350 குடும்பத்தினருக்கும் வீடு வீடாக சென்று 5கிலோ அரிசி பைகளை வழங்கினார். மேலும் பொதுமக்கள் உதவிகள் தேவைப்பட்டால் தங்களை அணுலாம் எனவும் நிகழ்வின் போது தெரிவித்தார். 

நிகழ்வின் போது ரெட்டம்பேடு ஊராட்சி செயலாளர் குருமூர்த்தி, அதிமுக நிர்வாகிகள் திருப்பதி, மணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT