தமிழ்நாடு

ஏழை எளியோருக்கு உணவு பொருட்கள் வழங்கி வரும் பெண் ஊராட்சி உறுப்பினர்

30th Mar 2020 11:03 AM

ADVERTISEMENT

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் ஊராட்சியான் 8வது வார்டு உறுப்பினர் ஏ.தமீமுனிசா அவரது வார்டில் ஏழை எளிய விதவைகள், ஆதரவற்ற பெண்களுக்கு உணவு பொருட்களை வழங்கி வருகின்றார்.

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் ஊராட்சி 8வது வார்டு உறுப்பினர் ஆரம்பாக்கம் கணபதி நகர், ஜீவா நகரை சேர்ந்த ஏ.தமிமூனிசா. கரோனா பாதிப்பு காரணமாக ஆரம்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்று வரும் அனைத்து நடவடிக்கைகளிலும் துணிவுடன் நேரிடையாக களத்தில் நின்று பணியாற்றுபவர் இவர்.

இந்நிலையில் இவரது வார்டை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட ஏழை எளிய விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட விதவைகள் கரோனா ஊரடங்கின் காரணமாக மிகவும் சிரமப்படுவதை கண்டறிந்தார். தொர்ந்து அவர்களுக்கு உதவும் விதமாக இவர் அனைவருக்கும் 3 கிலோ அரிசி, பருப்பு, தக்காளி மற்றும் மளிகை பொருட்களை அவர்களுக்கு வழங்கினார்.

தமீமுனிசாவின் இந்த செயலை ஆரம்பாக்கம் ஊராட்சி தலைவர் தனசேகர், ஊராட்சி செயலாளர் முரளி உள்ளிட்டோர் வெகுவாக பாராட்டினர். இந்நிலையில் கரோனா  பாதிப்பு முடியும் வரை தன்னால் இயன்ற உதவிகளை ஏழை எளிய பெண்களுக்கு செய்ய உள்ளதாக இது குறித்து கேட்ட போது தமீமுனிசா தெரிவித்தார்.

ADVERTISEMENT

Tags : Corona
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT