தமிழ்நாடு

தி.மு.க. விவசாய அணி மாநிலச் செயலாளர் பொறுப்பிலிருந்து இராமலிங்கம் விடுவிப்பு

30th Mar 2020 12:21 PM

ADVERTISEMENT

தி.மு.க. விவசாய அணி மாநிலச் செயலாளர் பொறுப்பிலிருந்து இராமலிங்கம் விடுவிக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

கரோனா தொடர்பாக ஆலோசிக்க அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தைகூட்ட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரியிருந்தார். மேலும் தற்போது கரோனா அச்சுறுத்தல் இருப்பதால் காணொலி வாயிலாக ஆலோசிக்கலாம் எனவும் அவர் அறிவுறுத்தியிருந்தார். 

இந்த நிலையில் கரோனா தொடர்பாக அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் தேவையற்றது என கே.பி.இராமலிங்கம் அறிக்கை வெளியிட்டிருந்தார். இதையடுத்து அவர் மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார். 

கே.பி.இராமலிங்கம் தி.மு.க. விவசாய அணி மாநிலச் செயலாளர் விடுவிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
 

ADVERTISEMENT

Tags : DMK
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT