தமிழ்நாடு

இந்தோனேஷியாவில் தவிக்கும் 430 தமிழ் குடும்பங்களை மீட்க வேண்டும்

30th Mar 2020 06:01 AM

ADVERTISEMENT

இந்தோனேஷியாவில் சிக்கித் தவிக்கும் 430 தமிழ் குடும்பங்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பான அவருடைய சுட்டுரைப் பதிவு: இந்தோனேஷியாவில் தவிக்கும் 430 தமிழ் குடும்பங்கள் தமிழகத்துக்கு திரும்பி வர விரும்பும் தகவல் எனக்குக் கிடைத்தது. அவா்கள் பத்திரமாகவும் நலமாகவும் வீடு திரும்ப பிரதமரும், தமிழக முதல்வரும் உடனடியாக மீட்பு உதவிகளைச் செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொள்வதாகப் பதிவிட்டுள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT