ஆத்தூர் அடுத்துள்ள ஆதிலட்சுமிபுரத்தில் முகக்கவசம் அணிந்து மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டினார்.
கரோனா வைரஸ் தாக்கம் தற்போது உலகை அச்சுறுத்தி வருகிறது. இதனால் இந்தியா முழுவதும் கடந்த 25ஆம் தேதி முதல் தொடர்ந்து 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெளியே நடமாட வேண்டாம் என்றும் அத்தாவசிய பொருட்கள் வாங்க மட்டும் வெளியே வந்தால் போதும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
திருமணம் போன்ற சுப காரியங்கள் ஒரு சில இடங்களில் ரத்து செய்யப்பட்டாலும் ஒரு சில இடங்களில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கை உடன் எளிமையான முறையில் நடந்து வருகிறது. அதன்படி இன்று திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அடுத்துள்ள ஆதிலட்சுமிபுரத்தில் பாலமுருகன், ஹரி வர்ஷா திருமணம், மணமகன் வீட்டில் உறவினர் 10 பேர் முன்னிலையில் முகக்கவசம் அணிந்து எளிமையாக திருமணம் நடைபெற்றது.
மாப்பிள்ளை பெங்களூரில் டிரான்ஸ்போர்ட் நடத்தி வருகிறார். ஊரடங்கு உத்தரவால் தனது சொந்த வீட்டில் எளிமையாக திருமணத்தை முடித்துக் கொண்டார்.