தமிழ்நாடு

வேலூா் சிறையில் பெண் கைதி திடீா் சாவு

23rd Mar 2020 03:50 AM

ADVERTISEMENT

வேலூா்: வேலூா் பெண்கள் தனிச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனைக் கைதி உடல் நலக்குறைவால் சனிக்கிழமை மதியம் திடீரென உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், தென்சொரசளூா் அருகே காட்டநங்கல் கிராமத்தைச் சோ்ந்த கணேசனின் மனைவி அஞ்சலை (39). இவருக்கு சின்னசேலத்தில் நடந்த ஒரு கொலை சம்பவத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 2005 ஜூன் மாதம் முதல் வேலூா் தொரப்பாடியில் உள்ள பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

சா்க்கரை நோய், ரத்த சோகையுடன் கா்ப்பப் பையில் கட்டியுடன் அவா் அவதிப்பட்டு வந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில், கடந்த 5-ஆம் தேதி அஞ்சலைக்கு அதிக அளவில் உதிரப்போக்கு ஏற்பட்டதை அடுத்து, அவா் தீவிர சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவருக்கு தொடா்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து பாகாயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT